பேய் பங்களா | ஐந்து நண்பர்களும் ஒரு பேயும்

 


அந்த நாள் பயணம்

அது ஒரு விடுமுறை நாள். ஐந்து நண்பர்கள் அந்த விடுமுறையை கொண்டாட பிக்னிக் சென்றிருந்தார்கள்.

ராஜேஷ், கார்திக், அர்ஜூன், பிரியா  மற்றும் திவ்ய. இவர்கள் ஐந்து பேரும் கல்லூரியிலிருந்தே நல்ல நண்பர்கள். இவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வேலையில் சேர்ந்ததிலிருந்து, எப்போதாவது தான் இவர்கள் நேரில் சந்திப்பார்கள். அந்த அளவிற்கு இவர்களுக்கு வேலை பாலு அதிகரிக்கிறது.

அப்படி இருக்கும்போதுதான் இந்த ஐந்துபேருக்கும் இரண்டு நாள் விடுமுறை கிடைக்கிறது. அப்போது இவர்கள் எங்காவது வெளியே செல்லலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அப்படி இவர்கள் வந்த இடம் தான் இது. இந்த இடம் இவர்கள் ஐந்துபேருக்குமே புதிய இடம். அப்படி ஒரு இடத்திற்கு வந்தால் தான் எல்லாவற்றையும் சிறிது நேரம் மறந்து சந்தோஷமாக இருக்க முடியும் என்று முடிவெடுத்து இங்கு வந்திருக்கிறார்கள்.

மழை மற்றும் காட்டுப்பாதை

 நாள் முழுவதும் தங்கள் நேரத்தை சந்தோஷமாக செலவிட்டுவிட்டு, மாலை நேரத்தில் தங்களது காரில் ஊர்திரும்ப தொடங்கினார்கள். அது ஒரு காட்டுப்பகுதி. சென்றுக்கொண்டிருக்கும்போது வானம் இருண்டு, இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்குகிறது. பயங்கர காத்துடனும், இடி மின்னலுடனும் மழை வெளுத்து வாங்குகிறது. கார் ஓட்டும் நபருக்கு எதிரில் என்ன இருக்கிறது என்று சரியாக கூட தெரியவில்லை. அதையும் பொருட்படுத்தாமல் சென்றுக்கொண்டிருக்கும்போது, வழியில் கார் பழுதாகி நின்றுவிடுகிறது. இதை சற்றும் எதிர்பாரதா நண்பர்கள், இந்த மழையில் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஐந்து நண்பர்களுள் ஒருவன், காரை சரி செய்ய முயற்சிக்கிறான், ஆனால் கார் சரியாகவில்லை. அந்த ஐந்து நண்பர்களும் என்ன செய்வதென்று புரியாமல் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அந்த மின்னல் வெளிச்சத்தில் ஒரு பங்களா தெரிகிறது. அந்த ஐந்து நண்பர்களில் மூன்றுபேர் ஒரு முடிவை எடுக்கிறார்கள். இன்றிரவு இந்த பங்களா ஓனரிடம் கேட்டு தங்கிவிட்டு, காலையில் காரை சரிசெய்துவிட்டு கிளம்பிவிடலாம் என்கிறார்கள். வேறு வழி இல்லாமல் அனைவரும் இதற்கு ஒப்புக்கொள்கிறார்கள். அந்த ஐந்து நண்பர்களும் பங்களாவை நோக்கி ஓடுகிறார்கள். கிட்டத்தில் பார்பதற்கு அந்த பங்களா அழகாக காட்சியளிக்கிறது.


சரியான நேரத்தில் கிடைத்த உதவி

 அந்த பங்களாவின் கதவை தட்டி சில நிமிடம் கழித்து ஒரு பாட்டி கதவை திறக்கிறார். அந்த பாட்டிக்கு கிட்டத்தட்ட என்பதுக்கு மேல் இருக்கும் வயது. அந்த பாட்டியிடம் நடந்தவற்றை சொல்கிறான் ஒருவன்.

பாட்டி: சரி பசங்களா இந்த மழைல நீங்க என்ன பண்ணுவீங்க. இன்னைக்கி இங்கயே தங்கிக்கோங்க. மாடில உங்களுக்கு இடம் இருக்கு அங்க எல்லாரும் படுத்துக்கோங்க.

அந்த ஐந்து நண்பர்களும் பாட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு மேல் மாடிக்கு சென்று, உடைகளை மாற்றிக்கொண்டு படுக்கையில் படுக்கிறார்கள். 

நள்ளிரவு அமானுஷ்யம்

அப்போது அந்த ஐவருக்குமே பசி எடுக்க தொடங்குகிறது. எல்லோரும் எடுத்து வந்த பைகளில் பார்த்தல் அதில் சாப்பிட எதுவுமே இல்லை. என்ன செய்வது என்று எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்கும்போது, அதில் இரண்டு பேர், இருங்க நாங்க போயிட்டு அந்த பாட்டிகிட்ட சாப்பிட எதனா இருந்தா வாங்கிட்டு வரோம் என்று அந்த இரண்டுபேரும் கீழே செல்கிறார்கள். கீழே அந்த பாட்டி எங்குமே இல்லை. வெளிக்கதவை திறந்து பார்க்கிறான் அந்த இவர்களில் ஒருவன். வெளியில் மழை இன்னும் வெளுத்து வாங்கிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த இரண்டுபேருக்கும் ஒரு சந்தேகம், இந்த மழையில் பாட்டி எங்கே சென்றிருப்பார் ? அப்போது அந்த டைனிங் டேபிள் மீது பார்க்கும்போது சில ப்ரெட் துண்டுகள் இருக்கின்றது. இப்போதைக்கு இது போதும் என்று அதை எடுத்துச் சென்று, எல்லோரும் அதை பகிர்ந்து சாப்பிட்டுவிட்டு உறங்குகிறார்கள். நேரம் அப்படியே ஓடுகிறது. ஒருவன் முழிக்கிறான். அப்போது ஒரே இருட்டாக இருக்கிறது. அங்கு கரண்ட் இல்லை. சரி கீழே சென்று தண்ணீர் குடிக்கலாம் என்று கீழே செல்கிறான். அந்த இடமே வித்யாசமாக இருக்கிறது. அப்போது அந்த மின்னல் வெளிச்சத்தில் சில விஷயங்களை பார்கிறான். பார்த்து பதறியடித்துக்கொண்டு தன் நண்பர்களை எழுப்புகிறான். 

"எல்லாரும் எந்திரிச்சிகோங்க ஒடனே இங்க இருந்து நம்ம கெளம்பனும் ".

யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. அந்த நண்பர்களுள் ஒருவன் கேட்கிறான்.

"என்னடா சொல்ற எதுக்கு இப்பவே கெளம்பனும்".

அப்போது அவன் பதற்றத்துடன், "டேய் இது சாதாரண பங்களா இல்ல இது பேய் பங்காளா, டார்ச் அடிச்சி உங்கள சுத்தி பாருங்க".

எல்லோரும் அங்கு டார்ச் அடித்து பார்கிராகள். எல்லோருக்கும் அதிர்ச்சி. அந்த அறை பாழடைந்த அறையாக காட்சியளிக்கிறது.

எல்லோரும் பதறிக்கொண்டு அந்த பங்களாவைவிட்டு வெளியே ஓடிச்செல்கின்றனர். ஐந்து நண்பர்களும் காரில் உட்காந்து பூட்டிகொல்கிரார்கள். 

காலை

ஒரு வழியாக விடிந்துவிட்டது. ஐந்து நண்பர்கள் முகமும் பேய் அறைந்ததுபோல் இருக்கிறது. ஐந்து பேரும் மெது, மெதுவாக காரை விட்டு வெளியே வருகின்றனர். இரவில் இவர்கள் இங்கு வரும்போது அழகாக காட்சியளித்த அந்த பங்களா இப்போது பாழடைந்து கிடக்கிறது. 

அந்த வழியாக ஒருவர் வருகிறார்.

அந்த நபர்: என்ன ஆச்சி இங்க நின்னுட்டு இருக்கீங்க ?

தங்களது கார் பழுதடைந்ததை பற்றி அவரிடம் சொல்கின்றனர். அவரும் நான் அதை சரி செய்கிறேன் என்று சொல்லி காரை சரி செய்ய ஆரம்பிக்கிறார்.

அந்த நபர்: ஆமா, எவளோ நேரமா இங்க இருக்கீங்க ?

"நாங்க இரவுல இருந்து இங்க தா இருக்கோம்"

அந்த நபரின் முகம் பதற்றமாக மாறுகிறது. இரவு முழுக்க இங்க இருந்திங்களா ?

அந்த நண்பர்களில் ஒருவன் நடந்ததை அவரிடம் சொல்கிறான்.

அந்த நபர்: நல்லவேல தப்புசிங்க. இங்க இரவுநேரதுல யாருமே வரமாட்டாங்க. பல வருஷமா இந்த பங்களா கைவிடப்பட்டுதா இருக்கு. இந்த இடத்துல நெறைய அமானுஷ்ய விஷயங்கள் தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சிசு. ஒரு சில வருஷத்துக்கு முன்னாடி ஒரு திருடன் இந்த கைவிடப்பட்ட பங்கலாகுள்ள போய் இருக்கா. காலைல அவ இந்த பங்களால இறந்து கிடந்திருக்கா. அதுல இருந்து இரவுல இந்த பக்கம் யாரும் போகுரதில்ல. அப்படி வந்தாலும் அந்த பங்களா பக்கம் போறதில்ல.நீங்க உயிர் தப்பிச்சதே பெரிய விஷயம்.

இவர் சொன்ன இந்த விஷயங்களை கேட்டு பயம் அதிகரிக்கிறது இந்த ஐந்து நண்பர்களுக்கு. அவர் காரை சரி செய்து குடுத்தவுடன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர்.


கருத்துகள்