- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
முன்னுரை
கார்திக், இவன் ஒரு photographer. இவனுக்கு பழங்கால இடங்களுக்கு சென்று அந்த இடங்களை புகைப்படம் எடுப்பதென்பது ஒரு ஹாபி. கார்திக்குக்கு ஒரு கைவிடப்பட்ட மாளிகையை பற்றி தெரியவருகிறது. பல வருடங்களாக கைவிடப்பட்டிருக்கும் மாளிகை. ஆச்சரியம் என்னவென்றால், அந்த மாளிகையின் வரலாறு யாருக்குமே தெரியவில்லை. இந்த மாளிகை ஒரு கிராமத்திற்கு பக்கத்தில், தனிமையான ஒரு இடத்தில் இருக்கிறது.
மாளிகைக்கு பயணிக்கும் கார்திக்.
அந்த மாளிகையை பற்றி கேள்விப்பட்டதும் கார்திக்குக்கு ஆர்வம் அதிகரிக்கிறது. உடனடியாக அந்த மாளிகையை பார்த்து புகைப்படம் எடுக்க செல்கிறான்.
அந்த இடத்திற்கு பயணித்து சென்று அந்த மாளிகையை பார்க்கும் கார்திக்குக்கு இன்னும் ஆர்வம் அதிகரிக்கிறது. அந்த மாளிகை பார்பதற்கு. பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இருப்பினும் அது பாழடைந்து இருக்கிறது.
அது ஒரு காலை நேரம். கார்திக் அந்த மாளிகைக்குள் செல்கிறான். அது காலை நேரமாக இருந்தாலும், சுற்றியுள்ள அமைதி, அந்த காற்றின் சத்தம் மற்றும் அந்த பாழடைந்த இடம். இவை சேர்ந்து ஒரு பய உணர்வை தருகிறது கார்திக்குக்கு. அவன் கையில் ஒரு Polaroid கேமரா உள்ளது. அந்த கேமரா மூலம் அந்த இடங்களை புகைப்படம் எடுக்கிறான். உடனடியாக அந்த கேமராவிலிருந்து போட்டோ பிரின்ட் செய்து வருகிறது. அதை எடுத்து அவனது தோலில் மாட்டிக்கொண்டிருந்த பையில் எடுத்து வைத்துக்கொள்கிறான்.
அந்த மாயக்கண்ணாடி
அங்கு சுற்றி பார்த்துக்கொண்டு நடந்து செல்லும்போது. ஒரு அறைக்குள் பெரிய கண்ணாடி இருக்கிறது. அந்த கண்ணாடியை பார்த்ததும் தனது கேமராவை எடுத்து புகைப்படம் எடுக்கிறான். சிறிது நேரத்தில் கேமராவிலிருந்து போட்டோ வெளியே வருகிறது. அந்த போட்டோவை கையில் எடுக்கிறான். அதில் படம் கொஞ்சம், கொஞ்சமாக தெரிய ஆரம்பிக்கிறது. சிறிது நேரத்தில் முழு படமும் தெரிகிறது. அதை பார்த்த கார்திக், பதறிபோகிறான். இதற்கு காரணம். இவன் எடுத்த அந்த கண்ணாடியின் புகைப்படத்தில், அந்த கண்ணாடிக்குள் ஒரு பெண்ணின் உருவம் நிர்ப்பது போல் போட்டோவில் தெரிகிறது. ஆனால் நேரில் பார்பதற்கு அந்த கண்ணாடி சாதாரணமாக இருக்கிறது. கார்திக் பயத்தின் உச்சிக்கு செல்கிறான். இந்த இடத்தில இவன் மட்டும்தான் இருக்கிறான் என்று நம்பிக்கொண்டிருந்த இவனுக்கு. அந்த நம்மிக்கையை உடைப்பது போல் இருந்தது இப்போது இவன் பார்த்த இந்த விஷயம்.
சரி மீண்டும் புகைப்படம் எடுத்து பார்க்கலாம் என்று கார்திக்குக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. தனது கேமராவை கை நடுக்கத்துடன் எடுக்கிறான். அந்த கண்ணாடியை மீண்டும் புகைப்படம் எடுக்கிறான். அந்த போட்டோ வெளியே வருகிறது. அதில் படம் கொஞ்சம், கொஞ்சமாக தெரிய ஆரம்பிக்கிறது. இவனது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கிறது. அந்த படம் முழுமையாக தெரிகிறது. அதை பார்த்த கார்திக் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறான். இப்போது அந்த கண்ணாடியில் இருக்கும் பெண்ணின் உருவம். கார்தியை கைக்காட்டிக்கொண்டிருப்பது போல் இருக்கிறது. நேரில் பார்த்தால் அந்த உருவம் தெரியவில்லை.
வேறொரு புதிய மாளிகை
இப்போது அந்த கண்ணாடிக்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல், வந்து இந்த கண்ணாடியை தொடு என்று சொல்வது போல் கேட்கிறது. கார்திக் ஒரு பயம் கலந்த ஆர்வத்தோடு அந்த கண்ணாடியை தொடுகிறான். தொட்ட அடுத்த நொடி அந்த கண்ணாடிக்குள் சென்றுவிடுகிறான். அந்த கண்ணாடிக்குள்ளும் இதே மாளிகைதான் இருக்கிறது. ஆனால் அது பாழடையாமல், புதுமையாக இருக்கிறது. இவனுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இவன் ஓடிச்சென்று மாளிகையின் கதவை திறக்க முயற்சிக்கிறான். ஆனால் கொஞ்சம் கூட அந்த கதவை அசைக்க முடியவில்லை. ஜன்னல் வழியாக தப்பிக்கலாம் என்று நினைத்தால் கூட அவனால் வெளியே செல்ல முடியவில்லை. அவன் எவளவோ முயற்சிக்கிறான். ஆனால் அவனால் வெளியே செல்ல முடியவில்லை. இந்த மாளிகைகுள் சிக்கிக்கொள்கிறான்.
அந்த பெண்
இந்த பக்கம், அந்த பாழடைந்த மாளிகைக்குள் இருந்த அந்த கண்ணாடிக்குள் இருந்து, ஒரு பெண் வெளியே வருகிறாள். அவளுக்கு ஒரு 25 வயது இருக்கும். பழமையான உடையை அணிந்திருக்கிறாள். சிறிது நேரம் அந்த கண்ணாடியையே உற்று பார்க்கிறாள். அவளின் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. பிறகு அந்த மாளிகையை விட்டு வெளியே சென்று அந்த இயற்கை காற்றை நன்றாக சுவாசித்துவிட்டு அங்கிருந்து பக்கத்திலிருக்கும் கிராமத்திற்கு செல்கிறாள்.
அந்த கிராமத்தில் இந்த பெண்ணையும் அவள் அணிந்திருக்கும் ஆந்த பழமையான ஆடையையும் வித்தியாசமாக பார்கிறார்கள் அந்த ஊர்மக்கள்.
அவள் நேராக சென்று ஒரு இடத்தை பார்த்து ஆழுகிறாள். அந்த இடத்தில ஒரு மாங்காய் மரம் இருக்கிறது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
யார் இந்த பொண்ணு ? ஏ இந்த மாங்கா மரத்த பாத்து அழுது.
என்று அந்த ஊர் மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். அந்த கூட்டத்தில் ஒரு பெண் (ஒரு 25 வயதுக்கு மேல் இருக்கும்) இந்த மர்ம பெண் அழுவதை பார்க்கிறாள். அவளுக்கு மிகவும் பாவமாக இருக்கிறது. அவளிடம் சென்று, வா என்னோட வீட்டு போய் பேசலாம் என்று அழைக்கிறாள். அழைத்தவுடன் அந்த மர்ம பெண் கண்களை துடைத்துக்கொண்டு அவளிடம் செல்கிறாள். உனக்கு அப்படியே என்னோட தோழி மனசு என்கிறாள் அந்த மர்ம பெண்.
அந்த கிராமத்தை சேர்ந்த அந்த பெண் இந்த மர்ம பெண்ணை அழைத்துக்கொண்டு அவளது வீட்டுக்கு செல்கிறாள். அந்த கிராமத்து பெண்ணின் பெயர் ஆதிரா.
ஆதிரா: ஆமா நீ சாப்டியா ?
இல்லை என்று தலையை அசைக்கிறாள் அந்த மர்ம பெண்.
ஆதிரா: சரி இரு நா உனக்கு சாப்பாடு போட்டுட்டு வர.
ஆதிரா அந்த மர்ம பெண்ணுக்கு உணவை பரிமாறுகிறாள். அந்த மர்ம பெண், பலநாள் பசியோடு இருப்பவர்கள் போல உணவை வேக, வேகமாக சாப்பிடுகிறாள். சாப்பிடும்போது அந்த பெண்ணுக்கு விக்கல் வருகிறது.
ஆதிரா: பாத்து. இந்தா தண்ணி குடி.
அந்த பெண் சாப்பிட்டு முடிக்கிறாள். அந்த ஊர்மக்களில் சிலர் ஆதிரா வீட்டுக்கு வருகிறார்கள். வந்து இந்த பெண்ணிடம் விசாரிக்கிறார்கள்.
யாருமா நீ. இந்த ஊருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.
அந்த பெண் அழ தொடங்குகிறாள். அதை பார்த்த ஆதிரா, இவளை தொந்தரவு செய்யாதிர்கள். அவள் சொல்லும்போது அவள் சொல்லட்டும் என்கிறாள்.
அது எப்படி எதுவும் கேக்காம இருக்கமுடியும். இந்த ஊருக்கு ஒரு பொண்ணு வந்திருக்கு. யாருனும் தெரியல. அப்போ கேக்கதான செய்வாங்க.
ஆதிரா: அவ ஒன்னும் சொல்ல வேணாம். அவ என்னோட வீட்டுல வச்சி நா பாத்துக்குற. இவ என்னோட வீட்டுக்கு வந்த சொந்தகாருனு நெனச்சிகோங்க.
அப்போது அந்த பெண் பேச ஆரம்பிக்கிறாள்.
அந்த பெண்: என்னோட பெயர் அகல்யா. நா இந்த ஊர சேர்ந்த ஒரு பொண்ணுதா.
என்ன இந்த ஊரா ? உன்ன இதுக்கு முன்னாடி இங்க பாத்ததே இல்லையே.
அகல்யா: நீங்கலாம் என்ன பார்த்திருக்க வாய்ப்பு இல்ல. நா அந்த மாளிகைல நானுறு வருஷமா அடைபட்டு இருந்த. அதோ அந்த மாங்கா மரம் இருந்த இடத்துலதா எங்களோட வீடு இருந்துச்சு.
ஏ ஆதிரா, இந்த பொண்ணு பைத்தியம்னு நெனைக்குற. பேசாமா இந்த பொண்ண இங்க இருந்து வெளிய அனுப்பிடு.
ஆதிரா: எல்லாரும் உங்க வேலையை பாருங்க. எல்லாம் வெளிய போங்க.
அனைவரும் புலம்பிக்கொண்டே வெளியில் செல்கின்றனர்.
அகல்யா: நா சொன்னது எல்லாம் உண்ம.
அகல்யாவின் கண்கள் கலங்கி இருக்கிறது.
ஆதிரா: கவலைப்படாத நா உண்ண நம்புற.
இப்போது அகல்யா, தனக்கு நடந்தவற்றை ஆதிராவிடம் சொல்கிறாள்.
என்ன நடந்தது என்பதை Part 2வில் பார்க்கலாம் நன்றி.
சிறுக்கதை
தமிழ் கதைகள்
பேய் கதை
Ghost Story Tamil
Horror Story Tamil
Part 1
Tamil Stories
Thrilling Mystery
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக