மனைவி உருவத்தில் பேய் (கற்பனை கதை)

 




அந்த இரவு

நள்ளிரவு நேரத்தில், வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புகிறார் ஒருவர். அது ஒரு Apartment. இவர் வரும் போது கேட் திறந்திருக்கிறது. அங்கு வாட்ச் மேனும் இல்லை. இவர் வண்டியை பார்க் செய்துவிட்டு, லிப்டை நோக்கி நடக்கிறார்.

இவர் சரியாக லிப்டிற்குள் செல்லும்போது வாட்ச் மேன் எங்கிருந்தோ வருகிறார். லிப்ட் மூன்றாவது மாடிக்கு செல்கிறது. லிப்டை விட்டு வெளியே அந்த நீண்ட காரிடாரில் நடந்து செல்கிறார் அந்த நபர்.

அந்த மாடியிலிருந்து கீழே பார்க்கும்போது அந்த வாட்ச் மேன் இவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார். இவர் எதற்காக நம்மையே பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற குழப்பத்தோடு அந்த இருள் சூழ்ந்த அந்த காரிடாரில் நடந்து செல்கிறார். அங்கு இவரின் Apartment கதவை திறந்து, உள்ளே சென்று லாக் செய்துவிட்டு, தன் உடமைகளை டேபிள் மீது வைத்துக்கொண்டிருக்கும்போது, இவருக்கு கால் வருகிறது. அந்த போனின் திரையில் வாட்ச் மேன் என்று எழுதப்பட்டிருக்கிறது.

விக்னேஷ்: ஹலோ

வாட்ச் மேன்: சார், நா வாட்ச் மேன் பேசுற. கீழ நீங்க மட்டும்தா லிப்ட்ல போனமாதிரி நா பாத்த. மேல பாத்தா உங்க மனைவியும் உங்க பின்னாடி வந்தாங்க. ஊர்ல இருந்து வந்துட்டாங்களா.

விக்னேஷ்: என்ன சொல்றீங்க ? நா மட்டும் தா வந்த. என்னோட மனைவி இன்னும் அவங்க அம்மா வீட்டுலதா இருக்காங்க.

வாட்ச் மேன்: சார், நீங்க உங்க வீட்டுக்குள்ள போகும்போது உங்க மனைவியும் பின்னாடியே உள்ள வந்தாங்க, என்னோட கண்ணால பாத்த.

விக்னேஷ் மெதுவாக திரும்பிப் பார்கிறார். அவரின் முகம் பயத்தில் உறைந்து போகிறது. 

 வாட்ச் மேன் பார்வையிலிருந்து 

வாட்ச் மேன் தனது அறையில் உட்காந்து இருக்கிறார். அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. வாட்டர் கேனை எடுத்துப்பார்க்கும்போது தண்ணீர் இல்லை. எனவே அவர் தண்ணீர் எடுத்துவர செல்கிறார். செல்வதற்கு முன்பு கேட்டை திறந்து வைக்கிறார். தான் இல்லாத போது யாரேனும் வந்துவிட்டால் அவர்களுக்கு சுலபமாக இருக்கும் என்பதற்காக. இருப்பினும் அந்த தண்ணீர் இருக்கும் இடம் தூரத்தில் ஒன்றும் இல்லை. அங்கிருந்து பார்த்தல் கேட் தெரியும். 

வாட்ச் மேன் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும்போது, விக்னேஷ் வருவதை பார்க்கிறார். விக்னேஷ் பைக்கை பார்க் செய்துவிட்டு, லிப்டை நோக்கி செல்கிறார். லிப்டின் கதவு திறக்கிறது. லிப்டிற்க்குள் விக்னேஷை தவிர்த்து யாருமே இல்லை. இதை வாட்ச் மேன் தண்ணீர் பிடித்துகொண்டு வரும் வழியில் பார்க்கிறார்.

இப்போது விக்னேஷ், மூன்றாவது மாடியில் நடந்து செல்கிறார். கீழிருந்து பார்க்கும் வாட்ச் மேனுக்கு விக்னேஷ் பின் அவரது மனைவி நடந்து செல்வது தெரிகிறது. வாட்ச் மேன் அவரை ஒரு குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் பின் நடந்து செல்லும் அவரது மனைவியின் முகத்தில் ஒரு உணர்ச்சியும் இல்லாதது போல் இருக்கிறது. பார்ப்பதற்கே வித்யாசமாக இருக்கிறது.

இன்று காலை

 வாட்ச் மேன்: என்ன sir தனியா போறீங்க இன்னைக்கி.

விக்னேஷ்: wife அம்மா வீட்டுக்கு போய்டாங்க. அவங்க ஒரு வாரத்துக்கு அங்கதா இருப்பாங்க. 

காலையில் விக்னேஷிடம் பேசியது இவருக்கு ஞாபகம் வருகிறது.

இவரோட மனைவி ஊருக்கு போயிட்டதா சொன்னாரே. அது இல்லாம கீழ லிப்ட்ல ஏறும்போது இவர் மட்டுமதா போனாரு. மேல பாத்த இவங்க மனைவியும் லிப்ட்ல இருந்து இருங்கி போறாங்க. எப்படி ?

இப்படி குழப்பத்திலே அவரை பார்த்துக்கொண்டிருக்கிறார். விக்னேஷ் வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்கிறார். மனைவியும் உள்ளே செல்கிறார். 

சரி, விக்னேஷ் sirக்கு கால் பண்ணி கேக்கலாம்.

வாட்ச் மேன் விக்னேசுக்கு கால் செய்கிறார். விக்னேஷிடம் தன் சந்தேகத்தை கேட்கிறார். 

 விக்னேஷ்: என்னோட wifeதா ஊருல இருக்காங்களே. இங்க எப்படினே அவங்க இருக்க முடியும் ?

இவர் பேசிக்கொண்டிருக்கும்போதே கால் கட் ஆகிறது.

வாட்ச் மேன் தன் அறைக்கு செல்கிறார். 

சில நிமிடம் கழித்து 

சில நிமிடங்கள் கழித்து, விக்னேஷ் லிப்டில் இருந்து பதட்டமாக ஓடி வருகிறார். இதை பார்த்த வாட்ச் மேன், அவரிடம் வேகமாக சென்று என்ன நடந்தது என்று கேட்கிறார்.

விக்னேஷ்:  அண்ணே நீங்க சொன்னது உண்மதா. என்னோட மனைவி மாதிரி ஒரு உருவம் எங்க வீட்டுக்குள்ள இருக்கு. அந்த உருவம் கொஞ்ச நேரத்துல ரொம்பவே விகாரமா மாறுச்சு. நா அப்படியே பதறி போய்ட்ட. ஒடனே அங்க இருந்து ஓடி வந்துட்ட.

விக்னேஷ் உச்சக்கட்ட பதற்றத்தில் வாட்ச் மேனிடம் நடந்தவற்றை சொல்லிகொண்டிருந்தான். 

வாட்ச் மேன் அவனை சமாதானப்படுத்தி, தண்ணீர் கொடுக்கிறார். தண்ணீர் பாட்டிலில் உள்ள முழு தண்ணீரையும் சில நொடிகளில் குடித்து  முடித்துவிடுகிறார்.  ஆனால் அவரின் முகத்திலிருந்த பதற்றம் சிறிதளவுகூட குறையவில்லை.

வாட்ச் மேன்: சரி sir, பயப்படாதிங்க. எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்காரு. அவர் இத பாத்துப்பாரு. இப்போ நீங்க என்னோட ரூம்லேயே தூங்குங்க, காலைல அவர போய் சந்திக்கலாம்.

விக்னேஷ் வாட்ச் மேன் அறையில் தூங்க முயற்சிக்கிறான், ஆனால் அவன் பார்த்த அந்த உருவம் இவன் தூக்கத்தை கெடுக்கிறது.

காலை

விடிந்தவுடன் வாட்ச் மேன் மற்றும் விக்னேஷ் இருவரும் அந்த நபரை பார்க்க செல்கிறார்கள். வெகு தூர பயணம். அது ஒரு காட்டுப்பகுதி. அதற்குள் இருவரும் பைக்கில் செல்கிறார்கள். அங்கு ஒரு வீடு இருக்கிறது. வெளியே பார்ப்பதற்கு பாழடைந்த நிலையில் இருப்பதுபோல் தெரிகிறது. வாட்ச் மேன் முதலில் உள்ளே செல்கிறார். அங்கு ஒரு cctv கேமரா இருக்கிறது. அதை பார்த்து நடந்தவற்றை சொல்கிறார். சிறிது நேரத்தில் கதவுகள் திறக்கிறது. வாட்ச் மேன் மற்றும் விக்னேஷ் இருவரும் உள்ளே செல்கின்றனர். உள்ளே பெரிய தாடி, மிகவும் வயதான ஒருவர் இருப்பார் என்று நினைத்த விக்னேஷுக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு ஒரு நாப்பது வயதிற்குள் இருக்கும். tshirt மற்றும் jean pant அணிந்திருக்கிறார். விக்னேஷிடம் என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்துக்கொள்கிறார்.


விக்னேஷ்: நீங்க பார்க்க சாதாரணமா இருக்கீங்க. நீங்க எப்படி......................

அவர் சிரித்தபடியே தன்னை அறிமுகப்படுதிக் கொள்கிறார். என் பெயர் மிதுன். என் அப்பா ஷர்மா பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தார். பல விஷயங்களை அவர் கண்டுபிடித்து, பல வகையான பேய்களை பிடித்திருக்கிறார். அவரிடமிருந்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். நான் ஒன்றம் மந்திரவாதி இல்லை. நான் சாதாரண மனிதன் தான். சில ஆராய்ச்சியின் மூலம் சில ரசாயனங்களை என் அப்பா மற்றும் நானும் கண்டுபிடித்தோம். அதை வைத்துதான் பேய்களை கட்டுபடுத்தி பிடித்து, அதன் உலகத்திற்கே அனுப்பி வைக்கிறோம் என்று சில விஷயங்களை விக்னேஷிடம் பகிர்ந்து கொள்கிறார். 

மிதுனுக்கு அது என்ன வகை பேய் என்பதில் சில சந்தேகங்கள் இருக்கிறது. விக்னேஷிடம் சில கேள்விகளை கேட்டு, அதை வைத்து சில ரசாயன கலவைகளை தன் பையில் எடுத்துக்கொண்டு இரவில் அந்த Apartmentக்கு மூன்று பேரும் செல்கின்றனர். வாட்ச் மேனை கீழ் நிற்க வைத்துவிட்டு மிதுனும், விக்னேஷும் மூன்றாவது மாடிக்கு செல்கின்றனர்.

அங்கு அந்த வீட்டின் கதவை திறந்துவிட்டு விக்னேஷ் கீழே சென்றுவிடுகிறார் பயத்தில். மிதுன் மட்டும் அந்த ரசாயனங்கள் இருக்கும் பையை எடுத்துக்கொண்டு அந்த வீட்டிற்க்குள் நுழைகிறார். வீடே அமைதியாக இருந்தது. மிதுனின் நெற்றியில் வியர்வை துளிகள் கொட்டியது. ஒரு விதமான பதற்றம் மிதுனை மிரட்டியது. அப்போது அவர் ஒரு ரசாயன பாட்டிலை எடுத்து, அதிலிருந்த பச்சை ரசாயனத்தை வீட்டின் மூலை முடுக்கில் தெளித்தார். அப்போது ஒரு அறையில் எரிந்துக்கொண்டிருந்த light அணைந்தது. அந்த அறையில் இருந்து மிதுனின் இறந்த தந்தையின் குரல் கேட்கிறது.

குரல்: மிதுன், எப்படிப்பா இருக்க ? உன்ன பாத்து எவளோ வருஷம் ஆகுது. உன்ன பாக்குறதுக்கு தா நா இங்க வந்திருக்க. 

அந்த குரல் அழ துடங்குகிறது. 

தன் தந்தை குரல் அழ தொண்டங்கியதும், மிதுனும் அழுகிறான்.

மிதுன்: அப்பா........ நீங்களா ? 

குரல்: அமா மிதுன். அப்பாதா. இங்க வா.

மிதுன் அந்த அறைக்குள் செல்ல முயல்கிறான். அப்போது, மிதுன் என்ற ஒரு சத்தம். அழைத்தது விக்னேஷ்.

இப்போதுதான் மிதுன் சுயநினைவுக்கு வருகிறான்.

விக்னேஷ்: அது உன்னோட அப்பா இல்ல.

விக்னேஷ் இதை சொன்னதும் அந்த இருட்டு அறையிலிருந்து ஒரு உருவம் வருகிறது. பார்ப்பதற்கு மிகவும் விகாரமாக இருக்கிறது. மிதுன் மற்றும் விக்னேஷ் இருவருமே பயத்தில் உறைந்து போகிறார்கள். அப்போது மிதுன் அவனது பையில் இருந்து இன்னொரு ரசாயனத்தை எடுக்கிறார். அது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது. 

அந்த நேரத்தில் அந்த உருவம் மிதுனை தாக்க வருகிறது. அது தாக்குவதற்குள், மிதுன் அந்த ரசாயனத்தை எடுத்து அந்த உருவதின்மீது ஊற்றுகிறார். அதை ஊற்றியவுடன் அந்த உருவம் உறைந்து போய் நிற்கிறது. அப்போது இன்னொரு பாட்டிலை எடுத்து திறக்கிறார். அதிலிருந்த ரசாயனதிலிருந்து புகை வர தொடங்குகிறது. அந்த புகை அந்த உருவதின்மீது பட்டவுடன் அந்த உருவம் கரும்புகையாக மாறி அந்த பாட்டிலுக்குள் சென்றுவிட்டது. மிதுன் உடனடியாக அந்த பாட்டிலை அடைத்து தனது பையில் வைத்து விடுகிறார். 

இத்தனை விஷயங்களையும் விக்னேஷ் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். 

மிதுன்: இனி எந்த பிரச்சனையும் இல்ல, நீங்க தைரியாம இந்த வீட்டுல இருக்கலாம்.

என்று சொல்லிவிட்டு அந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு மிதுன் அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

ஒரு வாரம் கழித்து 

விக்னேஷ் மற்றும் அவரது மனைவி, சோபாவில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது விக்னேஷின் மனைவி விக்னேஷிடம், ஒரு வாரம் நா இல்லாம சந்தோஷமா இருந்திருப்பல என்று நகைச்சுவையாக கேட்கிறார். விக்னேஷ் நடந்தவற்றை யோசித்து பாத்து சிரிக்கிறான். இங்கயே இந்த கதை முடிகிறது.

 






கருத்துகள்