Biriyani is an Emotion ? அப்படி பிரியாணில என்னதா இருக்கு ? | Story Blog Tamil

 






முன்னுரை 

வணக்கம் நான் ஹரிஷ்ராஜ். இன்றளவில் food reviewers நிறைய அளவில் நாம் காணமுடியும். ஒரு காலத்தில் blogல் தொடங்கி இன்று youtubeதளம் வரை நீண்டு இருக்கிறது. அதில் நிறையபேர் தேர்ந்தெடுக்கும் உணவு பிரியாணி என்று சொல்லலாம். அப்படி அந்த பிரியாணியில் என்ன தான் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினால் பலர் என்னிடம் சண்டைக்கு வந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு பிரியாணியின் மீது பலர் காதல்வயப்பட்டிருக்கிறார்கள். Biriyani is  an Emotion என்பார்கள். ஒரு காலத்தில் நான் யோசித்திருக்கிறேன், பிரியாணி வெறும் உணவுதானே அதில் என்ன இருக்கிறது என்று. ஆனால் சமீபத்தில் ஒரு இரவில், என் கடந்த காலங்களில் நடந்த சில விஷயங்களை நினைத்துப்பார்த்துக்கொண்டிருக்கும்போது, Biriyani is  an Emotion இந்த வார்த்தை சரி தான் என்று எனக்குள் தோன்றியது. இதற்கு காரணம் என் வாழ்க்கை பயணத்தில்  ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. அதை தான் இந்த blog  மூலம் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன்.

நான்

நான் பிறந்து வளர்ந்தது ஒரு கிராமம். நான் கல்லூரி படித்து முடித்தது  சென்னையில்.தொடக்கத்தில்  சென்னை எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. என் நண்பன் அங்கு ரூம் எடுத்திருந்தான், நான் அவனிடம் சேர்ந்துக்கொண்டேன். எங்கள் ரூமில் என்னையும் சேர்த்து மூன்று பேர். இருவருமே பள்ளி நண்பர்கள். தொடக்கத்தில் மூன்றுபேறாக இருந்தது, நாங்கள் படித்து முடித்து, வேலைக்கு போகும்போது பத்து பேர் இருந்தோம். நிறைய நல்ல அனுபவங்களால் நிறைந்திருந்தது எனது bachelors ரூம் life. 

Exam

நான் engineering 2nd year  படித்துக்கொண்டிருந்த  தருணம், மறுநாள் M2 exam. சிலநேரங்களில் எனது நண்பர்கள் குரூப் ஸ்டடிக்காக எனது ரூமுக்கு வருவார்கள். அன்று இரவு நாங்கள் படிக்கத்தொடங்கினோம். எப்போதுமே ஒரு இணையத்தளத்தில் முக்கிய வினாக்களை போடுவார்கள். அதை வைத்துப்படித்துக்கொண்டிருந்தோம். Maths Exam என்றாலே அந்த இணையதளத்தைத்தான் பின்பற்றுவோம். அன்று இரவு படித்துவிட்டு மறுநாள் காலை காலேஜ் சென்றோம். அங்கு பைக் பார்கிங் செய்ய ஒரு இடம் இருக்கும். அங்கு தான் exam time  வரும்வரைக காத்துக்கொண்டிருப்போம். நேரம் ஆனது, எங்களது ஹால்டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, exam ஹாலுக்குள் சென்று அமர்ந்தோம். சிறிது நேரத்தில் கொஸ்டின் பேப்பரை கொடுத்தார்கள். அதை பார்த்த எனக்கு மிகவும் அதிர்ச்சி. நேற்று இரவு முக்கிய வினாக்களாக பார்த்தது அவலோவாக எதுவும் வரவில்லை. என் நண்பர்களை திரும்பிப்பார்த்தேன், அவர்களின் முகத்திலும் அந்த அதிர்ச்சி இருந்தது. இப்போது நினைத்துப்பார்க்கும்போது சிரிப்பாக இருக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் எனக்குள் இருந்த பதற்றத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அன்று எனது mind  upset.

பிரியாணி உணவல்ல......ஒரு உணர்வு

Exam முடித்துவிட்டு என் நண்பன் காரில் சென்று, சிக்னலில் இறங்கினேன். அந்த சிக்னலை தாண்டிச்சென்றால் எனது ரூம் வந்துவிடும். அன்று இதுவரை எனக்கு தோன்றாத ஒரு எண்ணம் எனக்குள் தோன்றியது. ஒரு நல்ல பிரியாணி சாப்பிட வேண்டும் என்பதுதான் அந்த எண்ணம். சிக்னல் பக்கத்தில் ஒரு பிரியாணி கடை இருந்தது. அங்குச்சென்று சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தேன். சுடச்சுட சிக்கன் பிரியாணி முட்டையுடன் எடுத்து வந்து, என் அருகில் வைத்தார் அந்த கடையின் உரிமையாளர். அந்த நேரத்தில் அனைத்தையும் மறந்து, பிரியாணியை ரசித்து, ருசித்து சாப்பிட்டேன். இன்றுவரை எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால், mind upsetஆக இருந்த அந்த தருணத்தில் எப்படி எனக்கு அந்த எண்ணம் தோன்றியது என்பது, விடைத்தெரியா கேள்வியாக இருக்கிறது. 

நண்பர்கள், கழனி காற்று மற்றும் சுடச்சுட பிரியாணி

பிரியாணியை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம், அந்த அளவிற்கு எனக்கு பிடித்தமான உணவு இது. முதலில் HD தமிழ் எனும் Youtube Channel நடத்திக்கொண்டிருந்தேன், அதில் சில கதைகளை upload செய்திருக்கிறேன். அதில் பிரியாணியின் வரலாற்றைப் பற்றி பேசி போட வேண்டும் என்று யோசித்தேன். அதை பற்றி Content உருவாக்க தேடிப்பார்க்கும்போது, அதைப்பற்றி பல விஷயங்கள் தெரியவந்தது. அதில் எனக்கு பிடித்திருந்த ஒரு கதையை நான் என் சேனலில் பேசி upload செய்தேன். அது என்னவென்றால் பிரியாணி முதல் முதலில் முகலாய மன்னர்களுக்கான உணவாக இருந்திருக்கிறது. பிறகு அது முகலாய போர் வீரர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கேட்க எனக்கு சுவாரசியமாக இருந்தது. 

இதை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே எனக்கு இன்னொரு நிகழ்வு ஞாபகம் வருகிறது. இதுவும் பிரியாணியை சார்ந்த ஒரு நிகழ்வுதான். எனக்கு மறக்க முடியாத மற்றொரு நிகழ்வு.

நான், என் நண்பன் மற்றும் எனது அண்ணன்( சித்தி மகன் ). மூன்று பேரும் நல்ல நண்பர்கள். நானும் என் நண்பனும் ஒரே ஊர்தான். என் அண்ணன் பெங்களூரில் இருக்கிறார். எப்போது ஊருக்கு வந்தாலும் நாங்கள் மூன்று பேரும் சந்திப்போம். 

அப்படி ஒருநாள் என் அண்ணன் ஊருக்கு வந்திருந்தார். எப்போதும் நாங்கள் மூன்றுபேரும் கழனிக்கு சென்று அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். அப்படி ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்போது நல்ல காற்று, சுற்றி இயற்க்கை. அது ஒரு மதிய நேரம். அன்று விடுமுறை நாள். என் நண்பன், இங்கு அமர்ந்து பிரியாணி சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று கேட்டான். இந்த யோசனை எங்கள் இருவருக்கும் கூட பிடித்திருந்தது. அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் நிறைய பிரியாணி கடைகள் இருக்கிறது. உடனடியாக அங்கு கிளம்பிச் சென்றோம். அங்கு ஒரு கடையில் மூன்று சிக்கென் பிரியாணியை வாங்கிக்கொண்டு, மீண்டும் கழனிக்கு வந்து, அந்த மரத்தடி நிழலில், காற்றோட்டமாக அமர்ந்து அந்த பிரியாணி பார்சலை பிரிக்கும்போது, அந்த காற்றோடு சேர்ந்து அந்த பிரியாணியின் மணம் எங்கள் மூக்கை துளைத்தது.

 


அந்த வாசனை, பசியை இன்னும் அதிகமாக்கியது. ஆர்வம் தாங்க முடியாமல் அவசர, அவசரமாக கொஞ்சம் சோறு, அதில் கொஞ்சம் சிக்கன் துண்டு , கொஞ்சம், வெங்காயம்( தயிருடன் ) எடுத்து வாயில் வைத்தோம். ஆஹா......... அதன் சுவையை சொல்ல வார்த்தைகள் போதாது. அப்படி ஒரு சுவை. இது அந்த பிரியாணியின் சுவை மட்டும் அல்ல. சுற்றி இருந்த சூழல், உடன் இருந்த நண்பர்கள், அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்ட போது அதன் சுவை வேற லெவல். இதை படிக்கும் உங்களுக்கு இது சாதாரண ஒரு விஷயமாக தெரியலாம். ஆனால் அந்த விஷயங்களை சந்தோஷமாக அனுபவித்த எனக்கு அது இன்றளவும் மறக்கமுடியாத ஒரு அனுபவமாகவே இருக்கிறது. 

ஒரு உணவு இவளவு சந்தோஷத்தையும், நல்ல ஒரு அனுபவத்தையும் தரும் என்றால் Biriyani is an Emotion என்று சொல்வதற்கு தகுதியான ஒரு உணவுதான் பிரியாணி.

உங்கள் வாழ்க்கையில் இதுபோன்று, பிரியாணியை வைத்து ஏதேனும் அனுபவங்கள் இருக்கிறதா என்பதை கமென்ட் செய்யுங்கள்.










கருத்துகள்