- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
முன்னுரை
இதற்கு முன் பதிவில் இந்த மாளிகை கதையின் Part 1 பார்த்திருப்போம். அதன் தொடர்ச்சி தான் இந்த பதிவு. இந்த கதையின் முந்தைய பதிவை நீங்கள் பார்க்கவில்லை என்றால். அதை முதலில் படித்துவிட்டு வாருங்கள்.
தெரியவரும் உண்மை
அகல்யா சொல்வதை அந்த ஊர்மக்கள் யாரும் நம்பவில்லை. ஆனால் ஆதிராவுக்கு அகல்யா சொல்வதில் எதோ உண்மை இருப்பதுபோல் தெரிகிறது.
அகல்யா இப்போது என்ன நடந்தது என்று ஆதிராவிடம் சொல்கிறாள்.
சுமார் ஒரு நானூறு வருடத்திற்கு முன்பு அகல்யாவின் ஊர் இதுவாகத்தான் இருந்திருக்கிறது. நாம் முன் பதியில் பார்த்ததுபோல அந்த மாமரம் இருந்த அந்த இடத்தில் தான் அகல்யாவின் வீடு இருந்திருக்கிறது. அப்போது அகல்யாவுக்கு இருவத்தி ஐந்து வயது. அகல்யாவும், தீரனும் காதலிக்கிறார்கள். தீரன் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்த்தவன். இப்போது இவனுக்கு யாருமே இல்லை. இவன் மட்டுமே.
நாம் முதல் பாகத்தில் கேள்விப்பட்ட அந்த மாளிகைக்கு சொந்தகாரர் இவன் தான். இவனுக்கு வயது முப்பது. இரண்டு வருடங்களாக இருவரும் காதலிக்கிறார்கள். இன்று தீரன் அகல்யாவின் வீடிற்கு சென்று, அவளை பெண் கேட்கிறான். அகல்யாவுக்கு அம்மா மட்டும்தான். அகல்யாவின் அம்மா சிறிது யோசிக்கிறார். அப்போது தீரன், அகல்யாவை நான் நன்றாக பார்த்துக்கொள்வேன். அதுமட்டும் இல்லாமல் என் வீடும் இந்த ஊருக்கு பக்கத்தில் தான் இருக்கிறது. நீங்கள் அகல்யாவை பார்க்க நினைத்தாலும், அகல்யா உங்களை பார்க்க நினைத்தாலும் சுலபமாக வந்து பார்த்துவிடலாம். என்று சொல்கிறான் தீரன்.
அகல்யாவின் அம்மாவுக்கு தீரன் மீது நம்பிக்கை வருகிறது. திருமணம் செய்து வைக்க அகல்யாவின் அம்மா ஒப்புக்கொள்கிறார்.
திருமணம்
சில நாட்கள் கழித்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீரனின் மாளிகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த ஊர் மக்களுக்கு அழைப்புகள் வைக்கப்படுகிறது.
இன்று திருமண நாள். அகல்யாவும், தீரனும் சந்தோஷ மழையில் நனைந்துக் கொண்டிருக்கிரார்கள். இந்த திருமணதிற்கு ஊர் மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக வருகை தெரிவிதுக் கொண்டிருக்கிரார்கள். திருமணத்திற்கான சடங்குகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அகல்யாவின் அம்மாவின் கண்களிலும், அகல்யாவின் தோழியின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் கொட்டுகிறது.
தெரியவந்த உண்மை
திருமணத்திற்கான சடங்குகள் நடந்துக் கொண்டிருக்கும்போது. அகல்யாவுக்கு வித்தியாசமான ஒரு உணர்வு ஏற்படுகிறது. முகம் வேர்க்க துடங்குகிறது. கைகளில் நடுக்கம் ஏற்படுகிறது. இதை தீரன் கவனிக்கிறான்.
தீரன்: அகல்யா, என்ன ஆச்சி உனக்கு ? ஏ உடம்பெல்லாம் வேர்த்து இருக்கு.
அகல்யா: எனக்கு தெரியல. இது ஒரு வித்தியாசமான உணர்வா இருக்கு. எதோ நடக்க போற மாதிரி இருக்கு.
அகல்யா, தன் தலையை பிடித்துகொண்டு வித்தியாசமாக கத்த தொடங்குகிறாள். அனைவரும் அதிர்ந்து போகிறார்கள். தீரன் அகல்யாவை பிடித்து கட்டுப்படுத்த முயல்கிறான்.
அப்போது அகல்யா, தீரனை பார்த்து ஒரு விஷயத்தை சொல்கிறாள். அதை சொல்லும் போது அவளின் கருவிழிகள் கண்ணுக்கு மேல் சென்றுவிடுகிறது.
அகல்யா: நீ இப்போ இறந்து போகப்போற.
தீரன் இந்த வார்த்தையை கேட்டு அதிர்ந்துப் போகிறான்.
சிறிது நேரத்தில், அந்த கூட்டத்திலிருந்து ஒரு மர்ம நபர் ஓடிவந்து, தீரனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிதுவிட்டு செல்கிறான்.
ஊர்மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்கள்.
தவறாக புரிந்துக் கொள்ளும் ஊர்மக்கள்
இப்போது அகல்யா சுயநினைவிற்கு திரும்புகிறாள். அவள் பார்க்கும்போது தீரன் இறந்து கிடக்கிறான். அகல்யா தீரனை பிடித்துக்கொண்டு கதறி அழுகிறாள். அப்போது அந்த கூட்டத்திலிருக்கும் ஒருவர், இவள யாரும் நம்பாதிங்க. இவ ஒரு சூனியக்காரி. இவ என்னமோ பண்ணி அந்த நல்ல மனுஷன கொள்ள வச்சிட்டா, என்று சொல்கிறார். அதை கேட்ட அகல்யாவின் அம்மா மற்றும் அவளின் தோழி. கொன்னது வேற ஒருத்த, பழியதூக்கி ஏ பொண்ணுமேல போடுறீங்களா. என்று அவர்கள் திட்டுகிறார்கள்.
இவளை இப்படியே விட்டா நம்ம ஊர்ல ஒருத்தர்கூட உயிரோட இருக்கமுடியாது. இப்போ இவள ஒரு அறைல பூட்டி வைக்கணும், அதுக்கப்பறம் என்னபன்னலாம்னு யோசிக்கலாம். என்று சொல்கிறார். அந்த ஊர்மக்கள் அகல்யாவை பிடித்து ஒரு அறையில் அடைக்க இழுத்து செல்கின்றனர். அதை தடுக்க அகல்யாவின் அம்மாவும், அகல்யாவின் தோழியும் வருகிறார்கள். சில மக்கள் அவர்களை பிடித்து இழுத்துச்சென்று அகல்யாவின் வீட்டிற்குள் பூட்டிவைத்து விடுகின்றனர்.
அந்த மாளிகையில் இருக்கும் அந்த மக்கள். அகல்யாவை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு. பக்கத்து ஊரில் இருக்கும் எழிலன் என்ற மந்திரவாதி அழைத்துவரப்படுகிறார். அந்த எழிலனுக்கு நாப்பது வயதிற்கு மேல் இருக்கும்.
அந்த எழிலனிடம் நடந்ததை, இவர்கள் கண்னோட்டதிளிருந்து சொல்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.
எழிலன் அந்த மாளிகைக்குள் செல்கிறான். மேல்மாடியில் இருக்கும் அந்த அறையின் கதவை திறந்து உள்ளே செல்கிறான். அந்த அறைக்குள் அகல்யாவை பார்த்ததும் எழிலனுக்கு ஆச்சர்யம்.
எழிலன்: நீயா ?
அகல்யா, எழிலனிடம் நடந்தவற்றை சொல்கிறாள். எழிலன் தனது மந்திர சக்தியின் மூலம் என்ன நடந்தது என்று பார்கிறான். அப்போது இவனுக்கு எல்லா உண்மைகளும் தெரியவருகிறது. அகல்யாவிற்கு நடக்கபோவது முன்னரே தெரிந்திருக்கிறதே தவிர அவள் சூனியக்காரி ஒன்றும் இல்லை என்று எழிலன் தெரிந்துக்கொல்கிறான்.
எப்படி நடக்கபோகும் விஷயங்கள் முன்கூட்டியே தெரியும் சக்தி உனக்கு கிடைத்தது என்று அகல்யாவிடம் கேட்கிறான். ஆனால் அதற்கான பதில் அகல்யாவிடம் இல்லை. ஏனென்றால் இதற்கு முன்பு அவளுக்கு இதுபோல் நடந்தது இல்லை.
எழிலனின் உண்மை முகம்
எழிலன்: சரி கவலைப் படாத. நா உன்ன இங்க இருந்து காப்பாத்துற. ஆனா, நீ எனக்கு என்ன பண்ணுவ.
அகல்யா, அழுத்க்கொண்டே சொல்கிறாள். என்னோட தீரன் இந்த உலகத்தவிட்டே போய்ட்டா. இனி எனக்கு வாழவே பிடிக்கல. இப்போ நா சூனியக்காரி இல்லன்னு இந்த ஊர் மக்களுக்கு புரியவைக்காம போய்ட்டா, இந்த ஊர்ல என்னோட அம்மாவையும் நிம்மதியா வாழ விடமாட்டாங்க. என்னால முடிஞ்ச பணத்த உனக்கு தர. இந்த விஷயத்துல இருந்து என்ன காப்பாத்து என்று அகல்யா எழிலனிடம் கேட்கிறாள்.
எழிலன்: ச்சே...பணத்துக்காக இத பண்ணுவனு நெனைக்கிறியா. எனக்கு நீ தா வேணும். என்ன கல்யாணம் பண்ணிக்கோ. அப்போதா உன்ன நா காப்பதுவ. என்ன சொல்ற.
அப்படி நா பண்ணா அது என்னோட தீரனுக்கு செய்யுற துரோகம். கண்டிப்பா அத மட்டும் நா பண்ணவே மாட்ட என்று எழிலனின் ஆசைக்கு மறுப்பு தெரிவிக்கிறாள் அகல்யா.
எழிலன்: உன்னோட தீரனே உயிரோட இல்ல. அப்பறம் என்ன. மரியாதையா என்ன திருமணம் பண்ணிக்கோ இல்லனா உன்ன இந்த கன்னாடிகுள்ள அடைச்சுவச்சுடுவ.
இந்த மிரட்டலுக்கு தலைவணங்காத அகல்யா, அவன் ஆசையை நிராகரிக்கிறாள்.
ஆத்திரமடைந்த எழிலன், அவனின் மந்திரசக்தியை பயன்படுத்தி அகல்யாவை அந்த அறைக்குள் இருந்த கண்ணாடிக்குள் அடைத்து வைத்துவிடுகிறான்.
பிறகு அந்த மாளிகையில் இருந்து வெளியில் வந்து, அந்த ஊர் மக்களிடம் பேசுகிறான் எழிலன்.
நான் அந்த சூனியக்காரியை கண்ணாடிக்குள் அடைத்துவைதுவிட்டேன். இனி உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்கிறான்.
இப்போது அவனுக்குள் ஒரு எண்ணம் ஓடுகிறது. ஒரு வேலை யாராவது அகல்யாவை அந்த கண்ணாடிக்குள் இருந்து விடுவித்துவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறான்.
அப்போது திரும்பவும் அவனது மந்திரசக்தியை பயன்படுத்தி, அந்த ஊர்மக்களுக்கு அகல்யாவை பற்றிய விஷயங்கள், இந்த மாளிகை சம்பந்தமான விஷயங்களை மறக்கும்படி செய்கிறான்.
இப்போது இந்த கதையை கேட்டுக்கொண்டிருந்த ஆதிராவின் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது.
இந்த கதையை முழுமையாக படித்த சிலருக்கு ஒரு சந்தேகம் இருக்கலாம். கார்த்திக்கும், அகிலாவுக்கும் என்ன சம்பந்தம் என்று. இந்த கார்திக் தான் போன ஜென்மத்தில் எழிலன்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப, இவன் விதைத்த வினைக்கு, வினை அறுக்கிறான். இந்த இடத்திலே இந்த கதை முடிகிறது. உங்கள் கருத்துக்களை Comment Boxல் தெரிவியுங்கள்.
சிறுக்கதை
பேய் கதை
மர்மக் கதை
Horror Story Tamil
Reincarnation Story
Tamil Short Story
Thriller Story.Mystery & Suspense
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக